பாணந்துறையில் அதிகாலை நடந்த கொள்ளைச் சம்பவம் !!
பாணந்துறை வடக்கில் லிட்ரோ எரிவாயு விற்பனையில் இன்று அதிகாலை பத்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான எரிவாயு சிலிண்டர்களும் பணமும் திருடப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடையில் இருந்த 30 எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் 30,000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக கடையின் உரிமையாளர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேனில் வந்த சிலர் போலி சாவியை பயன்படுத்தி முன்பக்க கதவை திறந்து இந்த திருட்டை செய்தது விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் கடையின் முன்புறம் உள்ள கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.