ஜனாதிபதியின் மற்றுமொரு உத்தரவு!!
அரச செலவுகளை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார சவால்களை வெற்றிக்கொள்வதற்காக அரச செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் கடுமையான கட்டுபாடுகளை விதிக்குமாறு, ஜனாதிபதியின் செயலாளரால் அமைச்சின் செயலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்றும் சகல அமைச்சிகளினதும் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே ஜனாதிபதியின் செயலாளரால் இந்த சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் திறைசேறி சுற்றுநிருபத்தை கடுமையாக பின்பற்றுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.