ஹர்கர் திரங்கா: ரூ.2 லட்சம் செலவில் காரை உருமாற்றிய குஜராத் இளைஞர்..!!
நாடு முழுவதும் ஓராண்டுக்கு, இந்தியா விடுதலை அடைந்ததன் 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ண கொடியை மக்கள் ஏற்றும்படி மத்திய அரசு கேட்டு கொண்டது. ஹர்கர் திரங்கா என்ற கொள்கையின் அடிப்படையில், பொதுமக்கள் பலரும் தேசிய கொடியை தங்களது வீடுகளில் ஏற்றி வருகின்றனர். ஹர்கர் திரங்காவின் ஒரு பகுதியாக, குஜராத்தில் வசிக்கும் சித்தார்த் ஜோஷி என்ற இளைஞர் ரூ.2 லட்சம் செலவு செய்து, தேசிய கொடியில் உள்ள மூன்று வர்ணங்கள் இருப்பது போன்று தனது காரை உருமாற்றி உள்ளார். இதுபற்றி தோஷி கூறும்போது, ஹர்கர் திரங்கா பிரசாரம் பற்றி மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக குஜராத்தின் சூரத் நகரில் இருந்து டெல்லிக்கு 2 நாட்கள் பயணம் செய்தேன். நாங்கள் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்திக்க விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளார்.