’ஹரக் கட்டா’வின் பிரதான துப்பாக்கிதாரி அதிரடி கைது!!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான நந்துன் சிந்தக எனும் ஹரக் கட்டாவின் பிரதான துப்பாக்கிதாரியான ப்ரபோத குமார என்ற “கதிரா” கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ஹரக் கட்டா என்ற நந்துன் சிந்தக அண்மையில் துபாயில் கைது செய்யப்பட்டார்.
இவர் இந்த வாரம் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.