“ருஹுணு குமாரி” தடம்புரண்டது !!
“ருஹுணு குமாரி” புகையிரதம் இன்று காலை காலி – பூஸ்ஸ பகுதியில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால் கடலோர புகையிரத சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த புகையிரதத்தை தடமேற்றும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.