அரசு வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை..!!
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கங்கனா பள்ளியை சேர்ந்தவர் மகேஸ்வர் ரெட்டி (வயது 29). பி.டெக் பட்டதாரியான இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அரசு வேலைக்காக கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார். இருப்பினும் அரசு வேலை கிடைக்கவில்லை. ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலின் போது பட்டதாரிகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு வேலை வழங்காமல் ஏமாற்றி வருவதாக தன்னுடன் வேலை செய்பவர்களிடம் கூறி வந்தார். அரசு வேலை கிடைக்காததால் விரக்தி அடைந்த மகேஸ்வர் ரெட்டி நேற்று மாலை செகந்திராபாத் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன் திடீரென பாய்ந்தார். ரெயில் அவர் மீது ஏறி இறங்கியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மகேஸ்வர் ரெட்டி பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஸ்வர் ரெட்டி வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.