உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு கருவிகள் மற்றும் சாதனங்கள்- ராணுவத்திடம் ஒப்படைத்தார் ராஜ்நாத் சிங்..!!
ராணுவத்திற்கு நவீன கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் நடவடிக்கைகளை மத்திய பாதுகாப்புத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இதையடுத்து காலாட்படை சிப்பாய்க்கான பாதுகாப்பு சாதனம், கண்ணி வெடியை கண்டு பிடிக்கும் புதிய தலைமுறை சாதனம் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன. மேலும மேம்பட்ட திறன்கொண்ட தானியங்கி தகவல் தொடர்பு சாதனம், பீரங்கிகளுக்கான மேம்படுத்தப்பட்ட குறி வைக்கும் சாதனம் மற்றும் அதிநவீன தெர்மல் இமேஜர்கள் ஆகியவற்றை பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தார். இந்த சாதனங்கள் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். நவீன தொழில்நுட்பத்திலான கட்டமைப்பு வசதி மேம்பாடு, நமது ராணுவ படைகளுக்கு எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.