பள்ளி நேரத்தில் மாணவர்கள் பாதுகாப்பு- தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!
மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கோவையில் சில தனியார் பள்ளிகள், பெற்றோரிடம் உறுதி மொழி படிவம் பெற்றதாக புகார் எழுந்தது. பள்ளி நிர்வாகம் படிவம் பெற்ற விவகாரம் சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பள்ளி நேரத்தில், வளாகத்திற்குள் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே, முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் தனியார் பள்ளிகள் நடந்து கொண்ட விதம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணையில் உறுதிமொழி படிவம் பெற்றது உறுதிபடுத்தப்படும் பட்சத்தில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பெற்றோர் தயங்காமல், புகார் அளிக்கலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் பூபதி தெரிவித்துள்ளார்.