மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகள் கண்டுகொள்ளவில்லை…..! நா.வர்ணகுலசிங்கம்.!! (வீடியோ)
மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகள் கண்டுகொள்ளவில்லை என வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவரும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சாமசங்களின் சம்மேளன உப தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வடமராட்சியில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
இரண்டு மாதங்களுக்கு மேலாக கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,
இதேவேளை மாவட்ட அரசாங்க அதிபர் மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் எந்தவிதமான கரிசனையும் கொள்ளவில்லை என்றும் அவர் தன்னுடைய கதிரையை காப்பாற்றுவதற்காக மட்டுமே தனது பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் குற்றம் சாட்டிய அதே வேளை பருத்தித்துறை பிரதேச செயலாளர்கள் சிந்தித்து செயலாற்ற தெரியாதவர் என்றும், அவர் மீனவ மக்களுடைய பிரச்சினையை தொடர்பில் அணுகி தீர்ப்பதற்கான எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் நாலுபேர் சொல்வதை கேட்டே முடிவெடுக்கக் கூடியாத என்றும்,
தெரிவித்தவுடன் அவர் சுயாதீனமாக முடிவெடுக்கத் தெரியாத ஒரு பிரதேச செயலாளர் என்றும் தெரிவித்ததுடன்
இதேவேளை மீன்பிடி நீரியல் வளத்துறை பணிப்பாளர் யாழ் மாவட்டத்திற்கு மண்ணெண்ணை அதிகளவில் தேவையில்லை என்று தெரிவித்ததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்,
யாழ் மாவட்டத்திற்கு மண்ணெண்ணெய் தேவை இல்லை என்பதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மீனவர்கள் பெரிதும் மண்ணெண்ணெய் இன்றி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சிலரே அதிக விலை கொடுத்து மண்ணெண்ணெயை வாங்கி தொழிலில் ஈடுபடுவதாகவும், ஒருசிலர் பாய் மரத்தில் தொழிலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்த நா.வர்ணகுலசிங்கம்
இவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் இந்த மீனவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள், அவர்களின் வாழ்வாதாரம் என்ன, என்பது தொடர்பில் எந்தவொரு அரசியல்வாதியும் வந்து கூட மீனவ சமூகத்தை சந்திக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியதுடன்,
கச்சதீவை தாம் மீட்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் ஈடுபட்டு விருவதாக தெரிவித்தது தொடர்பில் விவகாரம் தொடர்பில் கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒரிபோதும் வழங்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”