இன்று காலை 11 மணிக்கு தேசிய கீதம் பாடவேண்டும் – மகாராஷ்டிர அரசு வேண்டுகோள்..!!
இந்தியா சுதந்திரத்தின் 76-வது ஆண்டு தொடங்கும் நிலையில், இல்லந்தோறும் மூவர்ண கொடி ஏற்றும் ஹர் கர் திரங்கா இயக்கத்தை பிரதமர் மோடி அறிவித்தார். பிரபலங்கள், பொதுமக்கள் என நாட்டு மக்கள் மூவர்ண கொடியை வீடுகளில் ஏற்றி அது குறித்து புகைப்படத்தை பதிவிடுமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து இல்லந்தோறும் மூவர்ணக்கொடி வலைதளத்தில் 6 கோடிக்கும் மேற்பட்ட மூவர்ணக் கொடி செல்பி படங்கள் பதிவேற்றப்பட்டன. இந்நிலையில், சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று காலை 11 மணிக்கு மக்கள் தேசிய கீதம் பாட வேண்டும் என மகாராஷ்டிர மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் காலை 11 மணி முதல் 11.01 மணிக்குள் தேசிய கீதத்தை பாடி முடிக்க வேண்டும். மாநில அரசின் அனைத்துத் துறைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இதில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது மத்திய அரசின் சுவராஜ் மகோத்சவின் ஒரு பகுதி என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.