22ஆவது திருத்தத்துக்கு எதிராக மனுதாக்கல்!!
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தில் உள்ள சில உறுப்புரைகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதாக தெரிவிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு, வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட பிரஜைகள் 9 பேரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.