மாணவர் போராட்டத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை உயர்வு!!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்ற வசந்த முதலிகே இன்று (18) விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.