;
Athirady Tamil News

பெற்றோர்களே அவதானம்; 1929க்கு உடன் அழையுங்கள்!!

0

சிறுவர்களை இணையத்தளம் ஊடாக பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இணையத்தளம் ஊடாக கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சிறுவர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்துகின்றனர்.

இதன்போது, பலர் சிறுவர்களை பல்வேறுப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.

இதுபோன்ற பல சம்பவங்கள் தற்போது பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்கு பெற்றோர்அவதானமாக இருக்க வேண்டும் என்றும், இவ்வாறான சம்பவங்கள் குறித்து உடனடியாக அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.