1.35 கோடி குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட்போன்: ராஜஸ்தான் அரசு அறிவிப்பு..!!
ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் முதல்-மந்திரி டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவித்தார். அதன்படி, சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1 கோடியே 35 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு இணைய இணைப்பும் அளிக்கப்படுகிறது. இதற்கான திட்ட செலவு ரூ.12 ஆயிரம் கோடி ஆகும். இதற்கிடையே, இத்திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டது. இணைய இணைப்பு அளிப்பதற்கு 3 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அவற்றில் ஒரு நிறுவனம் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. பண்டிகை காலம் தொடங்குவதற்குள், முதல்கட்ட ஸ்மார்ட்போன்களை வழங்குவதற்கான பணிகளை ராஜஸ்தான் அரசு முடுக்கி விட்டுள்ளது.