சிவில் சமூக பிரதிநிதிகளுடன் சந்திப்பு! (PHOTOS)
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை சிவில் சமூக தரப்பினரை யாழ்ப்பாணம் யு.என்.எச்.சி.ஆர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளுக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரும் உடனிருந்தார்.
இந்த சந்திப்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராஜா, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும்
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாதிக்கப்பட்ட தரப்புக்கள் நீதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.