ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளருடன் சந்திப்பு!!
ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பனிப்பாளருக்கு யாழ்ப்பாண மாநகர சபை முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் சனிக்கிழமை இடம் பெற்றது.
குறித்த சந்திப்பு குறித்து முதல்வர் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடி மற்றும் யுத்தத்தின் பின் நாட்டில் பல சொத்துக்கள் சேதம் ஆக்கப்பட்டமை வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் எமது நாட்டிலே முதலீடுகளை கொண்டு வருவதற்கு முன்பே வருகின்ற போதிலும் எமது நாட்டில் உள்ள முரண்பாடான கொள்கைகள் காரணமாக அவர்கள் தமது முதலீட்டை மேற்கொள்ளாத நிலை காணப்பட்டு வருவதாகவும் மாநகர சபை முதல்வர் ஐக்கிய நாடுகள் சபையின் பணிப்பாளரிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
மேலும் தற்போது ஆட்சியிலுள்ள ஜனாதிபதி பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் குறித்த ஜனாதிபதி பிரதமராக பதவி வகித்த காலப் பகுதியிலே ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது பயங்கரவாத தடை சட்டத்தினை நடைமுறையில் வைத்திருப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்னும் விடயத்தையும் குறித்த பிரதிநிதிகளிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.