;
Athirady Tamil News

அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறிய மந்திரி மாதுசாமி காங்கிரசில் சேர முடிவு..!!

0

அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறிய மந்திரி மாதுசாமி பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. \

அரசு மீது மாதுசாமி குற்றச்சாட்டு
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் சட்டத்துறை மந்திரியாக இருந்து வருபவர் மாதுசாமி. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக ஆர்வலர் ஒருவருடன், மந்திரி மாதுசாமி செல்போனில் பேசும் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவியது. அந்த சமூக ஆர்வலருடன் பேசும் போது, கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு செயல்படவில்லை என்று கூறியிருந்தார். ஆளும் பா.ஜனதா அரசு மீது, அக்கட்சியை சேர்ந்த மந்திரியே குற்றச்சாட்டு கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

காங்கிரசில் சேர முடிவு?
செல்போனில் பேசியது நான் தான் என்றும் மந்திரி மாதுசாமி ஒப்புக் கொண்டு இருந்தார். அரசு மீது குற்றச்சாட்டு கூறியதால் மாதுசாமி மீது சக மந்திரிகள் கடும் அதிருப்தி அடைந்திருந்தனர். இந்த நிலையில், மந்திரி மாதுசாமி பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர போவதாக தகவல்கள் பரவி வருகிறது. துமகூருவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான ராஜண்ணா திப்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது மந்திரி மாதுசாமி காங்கிரசில் சேர ஆர்வத்துடன் இருப்பதாக கூறி இருந்தார். ஜனதா பரிவாரில் இருந்து மாதுசாமி, எடியூரப்பா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்திருந்தார். துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட பலமான வேட்பாளர்கள் இல்லை. இதன் காரணமாக மாதுசாமியை காங்கிரசுக்கு இழுத்து, சிக்கநாயக்கனஹள்ளியில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தவும் முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.