இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும்!!
மனித உரிமைப் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹசாந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை தடுத்து வைக்கும் உத்தரவுகளில் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள், கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேற்குறிப்பிட்ட விடயத்தையும் வலியுறுத்தியுள்ள அவர், அவர்களை அவ்வாறு செய்வது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும் என தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.