;
Athirady Tamil News

அசாமில் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் பலி- 4 பேர் படுகாயம்..!!

0

அசாமின் கச்சார் மாவட்டத்தில் இன்று வாகனம் டிரக் மீது நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். மாவட்டத்தின் கடிகோரா பகுதியில் அதிகாலை 2 மணியளவில் ஜீவன் மிசன் பணியின் பணியாளர்களை ஏற்றிச் சென்ற லாரியும் வாகனமும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சாலை விபத்தில், “மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த 4 பேர் சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்,” என்று மேலும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.