வாழ்வாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் ReSoco திட்ட மீளாய்வுக்கூட்டம்!! (PHOTOS)
வாழ்வாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் ReSoco திட்ட மீளாய்வுக்கூட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (22.08.2022) காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
world vision நிறுவனத்தினால் சங்கானை , சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுகளில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கான பணக்கொடுப்பனவுகள் , உணவுப்பாதுகாப்பு, சேமிப்பு ஆகிய ஒன்று சேர் திட்டங்களுக்கு அனுமதி வழங்குதல் மற்றும் ReSoco திட்ட மீளாய்வுக் கூட்டம் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.|
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ,மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள்,
SCDR BHA திட்ட முகாமையாளர் கிலாட்ஸ் றொசாறியோ, (world vision) ReSoco திட்ட முகாமையாளர் ஜீட் நவிந்தன் (world vision), அரச சார்பற்ற நிறுவன இணைப்பாளர் மற்றும் துறை சார் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.