டெல்லி மதுபான உரிமம் முறைகேடு: 11 கலால்வரி அதிகாரிகளுக்கு சம்மன்- விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு..!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கெஜ்ரிவால் மந்திரி சபையில் மணீஷ் சிசோடியா துணை முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அவர் கல்வி, ஆயத் தீர்வை உள்ளிட்ட இலாக்காக்களை கவனித்து வருகிறார். கடந்த ஆண்டு டெல்லியில் கொண்டுவரப்பட்ட கலால்வரி கொள்கைப்படி மதுபானம் உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக மணீஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமானவர்களுக்கு மதுபான நிறுவனங்கள் ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை வழங்கியதாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டியது. இந்த முறைகேடு தொடர்பாக சிசோடியா வீடு உள்பட 31 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 9-ந் தேதி சோதனை நடத்தினார்கள். இந்தநிலையில் மதுபான உரிமம் முறைகேடு தொடர்பாக டெல்லி கலால் துறை அதிகாரிகள் 11 பேரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது. கலால் வரி கமிஷனர் அர்வா கோபி கிருஷ்ணா, துணை கமிஷனர் ஆனந்த் திவாரி உதவி கமிஷனர் பங்கஜ் பட்னார்கர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்படுகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த வாரம் துணை நிலை கவர்னர் சக்சேனா பரிந்துரை செய்து இருந் தார். இதன் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான இன்டோ ஸ்பிரிட் நிறுவனத்தின் மேலாண் இ யக்குனர் சமீர் மகேந்து உள்பட பலரிடம் சி.பி.ஐ. ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தது.