மதுபோதையில் பயணிகள் பேருந்தை செலுத்திய இ.போ.ச சாரதி மானிப்பாயில் கைது!! (படங்கள்)
மதுபோதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் காரைநகர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை செலுத்திய சாரதி மது போதையில் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து ,மானிப்பாய் பொலிஸார் சண்டிலிப்பாய் கட்டுடை பகுதியில் குறித்த பேருந்தினை மறித்து சாரதியை பரிசோதித்துள்ளனர்.
அதன் போது சாரதி மது போதையில் இருந்தமையை உறுதி செய்ததை அடுத்து அவரை கைது செய்தனர். அதேவேளை பிறிதொரு சாரதியை வரவழைத்து பேருந்தினை அனுப்பி வைத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”