பஞ்சாப்பில் பிரதமர் பாதுகாப்பு குளறுபடி- சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல்..!!
பிரதமர் மோடி, கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி பஞ்சாப் மாநிலத்துக்கு வந்த போது பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது. சில போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மேம்பாலத்தில் காரிலேயே மோடி சுமார் 20 நிமிடம் காத்திருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் முறையிப்பட்டது. இதையடுத்து பிரதமர் பாதுகாப்பு குளறுபடி குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையிலான குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. இந்த குழு விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் பெரோஸ்பூர் எஸ்.எஸ்.பி., சட்டம்-ஒழுங்கை சீர் செய்ய தவறி விட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீதிபதி இந்து மல்கோத்ரா குழுவின் அறிக்கை அடுத்த கட்ட நடவடிக்கை க்கு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.