;
Athirady Tamil News

சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம்: ஜனாதிபதி ரணில்!!

0

எதிர்காலத்தில் தரை, வான், கடல் மாத்திரமன்றி சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம். எனவே எமது வீரர்கள் அவ்வாறான தொழில்நுட்ப யுத்தத்துக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமான இராணுவத்தை உருவாக்க ஒழுக்கம், பயிற்சி, அறிவு ஆகியன அவசியம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஏற்கனவே இந்த விடயங்கள் அனைத்தையும் நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி வர்ணம் மற்றும் பல்கலைக்கழக வர்ணம் வழங்கும் நிகழ்வில் நேற்று (25) பிற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தப் பல்கலைக்கழகமானது, இராணுவத்தினருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், பல்கலைக்கழகங்கள் குறைவாக உள்ள நாடுகளின் சிவில் மாணவர்களும் அதில் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.