குறைந்த அளவிலான பேருந்துகளே சேவையில்!!
நாடளாவிய ரீதியில் இன்று முதல் 50 வீதத்திற்கும் குறைந்த அளவிலான பேருந்துகளே சேவையில் ஈடுபடுத்தப்படலாமென அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி உருவாகி வருவதன் காரணமாகவே இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக உரிய முறையில் டீசல் விநியோகம் முன்னெடுக்கப்படவில்லை எனவும், இதன் காரணமாக நேற்றைய தினமும் பேருந்து முழுமையாக சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.