புதிய முயற்சியாளர்களுக்கான திட்ட கடன் வழங்கும் நிகழ்வு!!
காரைதீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ் சதீஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை (25)இடம்பெற்றது.
நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அம்பாறை மாவட்டம்காரைதீவு சமூர்த்தி வங்கியினால் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சமூர்த்தி திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 20 லட்சம் ரூபாய் காசோலையினை தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கி வைத்தார்.
காரைதீவு பிரதேச செயலக சமூர்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.எச். அச்சு முகம்மது,முகாமைத்துவ பணிப்பாளர் எம். மதியழகன் ,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.பஹ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இதன்போது காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், காரைதீவு பிரதேச சமுர்த்தி அதிகாரிகள் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக வியாபார நிலையங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் தேவையான ஆலோசனைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.