நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவ உற்சவம் !! (PHOTOS)
வரலாற்று சிறப்பமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவ உற்சவம் ஷண்முக புஸ்கரணி தீர்த்த கேணியில் இன்று காலை இடம்பெற்றது.
இன்று காலை முதல் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை , ஸ்தம்ப பூஜை என்பன இடம்பெற்று ஆலய தீர்த்த கேணியில் தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக பிள்ளையார் மற்றும் சண்டேஷ்வரருடன் உள்வீதி, வெளிவீதி வலம் வந்து வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.
வௌ்ளி எலி வாகனத்தில் பிள்ளையாரும், வௌ்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமானும்,வெள்ளி எருது வாகனத்தில் சடேஸ்வரரும் வெளிமயில் மற்றும் வெள்ளி அன்னவாகனங்களில் வள்ளி,தெய்வயானை ஆகியோரும் வீதி வலம் வந்தனர்.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பக்தர்கள் தீர்த்தோற்சவ உற்சவத்தினை கண்டுகளித்தனர்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் ஒகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.இருபத்தைந்து நாள் கொண்ட மகோற்சவத்தில் இன்று மாலை கொடியிறக்கமும்,நாளை பூங்காவனமும் நடைபெற்று நாளை மறுதினம் வைரவர் உற்சவத்துடனும் மகோற்சவ பெருவிழா நிறைவு பெறவுள்ளது.