இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் – தலைநக்ர் டெல்லியில் அதிகம்..!!
மத்திய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நாட்டில் செயல்படும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அங்கீகாரம் பெறாமல் நடத்தப்படும் 21 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில், தலைநகர் டெல்லியில் சுமார் 8 போலி பல்கலைக்கழகங்களும், உத்தர பிரதேசத்தில் 7, ஒடிசா, மேற்குவங்காளம், ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரியில் தலா ஒரு போலி பல்கலைக்கழங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் போலி பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.