பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு!!
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகத்தையும் பாதாள உலகக் குழுவினரையும் முற்றாகக் கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸாருக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அமைச்சில் நேற்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில், அதிகளவான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்ற, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பொலிஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இதற்கமைய, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன், தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் கோஷ்டியைக் கட்டுப்படுத்துவதற்கு முழுமையான அதிகாரத்துடன் செயற்படுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மே மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், நாடுமுழுவதும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 25 இற்கும் அதிகமானார் உயிரிந்தமை குறிப்பிடத்தக்கது.