மதுபான விற்பனையில் ஏற்பட்ட சிக்கல்!!
தரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஸ்டிக்கர்கள் மதுபான போத்தல்களில் ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், மதுபான விற்பனையில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக மதுபானசாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மதுபான விற்பனை நிலைய உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபான தரத்தினை உறுதிப்படுத்துவதற்கான ஸ்டிக்கர்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ஸ்டிக்கர்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய முடியாத நிலையில் தரப்படுத்துவதற்கான ஸ்டிக்கர்கர்களை காட்சிப்படுத்துவது இடைநிறுத்தப்பட்டது.
எவ்வாறாயினும் அடுத்த வருடத்தில் ஸ்டிக்கர்களை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது.