பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த இளைஞன் மரணம்!!
குருபபிலா கம பகுதியில் இருந்து பலாங்கொடைக்கு பஸ்ஸில் சென்ற 22 வயதுடைய நிஸ்சங்க குமார சிறி என்னும் இளைஞன், பஸ்ஸில் இருந்து தவறி விழ்ந்துள்ளார்.
ராஸ்கல பகுதியில் வைத்து குறித்த இளைஞன் எச்சில் துப்புவதற்காக பஸ்ஸில் இருந்து இறங்கிய போதே தவறி விழ்ந்துள்ளான்.
இதையடுத்து வீட்டிற்கு சென்ற இளைஞன், திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார்.
சடலம் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.