திங்கள் முதல் சேவை தடைப்படும்!!
எரிபொருள் பிரச்சினைக்கு நாளைய தினம் (28) தீர்வு வழங்கப்படாவிட்டால் திங்கட்கிழமை முதல் சேவையில் இருந்து விலகுவதாக அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் எச்சரித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் ஊடாக பாடசாலை வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட வேண்டுமென சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.