;
Athirady Tamil News

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் 08 பேர் தமிழகத்தில் தஞ்சம்.!!

0

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகில் , வயோதிப பெண் , ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட 08 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

தலைமன்னார் பகுதியை சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் , தலைமன்னார் மேற்கை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரும் அவருடைய , மகன் மற்றும் மக்களும் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பப்பெண் பெண்ணொருவரும் , அவருடைய மகளொருவரும் , இரண்டு மகன்களுமாக 08 படகொன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் தஞ்சமடையும் நோக்குடன் சென்றுள்ளனர்.

அவர்களை படகோட்டி , தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள மணல் திட்டி இறக்கி விட்டு தப்பி சென்றுள்ளார்.

இன்றைய தினம் சனிக்கிழமை அது தொடர்பில் தகவல் அறிந்த தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினர் , அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.