யாழ்.உடுவில் பேருந்து நிலையத்தில் நின்ற இளைஞன் மீது வாள் வெட்டு!
பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
யாழ்ப்பாணம் , உடுவில் பிரதேச செயலகத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் காத்திருந்த இணுவில் காரைக்கால் பகுதியை சேர்ந்த இளைஞன் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”