தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை பெற முடியாமல் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகளை பெற முடியாது!! (வீடியோ, படங்கள்)
தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை பெற முடியாமல் தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகளை பெற முடியாது .தற்போதைய ஜனாதிபதியிடம் தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் ஒன்றினைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.அது தவிர கல்முனை பிரச்சினை தொடர்பாக 29 வருடங்களாக இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை போராடுகிறீர்கள்.இதனை தரமுயர்த்துவதா இல்லையா என்பதை முதலில் வினவுங்கள் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
தியாகிகளை நினைவு கூருவோம்.அவர் தம் உறவுகளை கௌரவிப்போம் ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூறும் வைபவமும் அவர் தம் உறவுகளை கௌரவிக்கும் நிகழ்வும் சனிக்கிழமை(27) மாலை கல்முனை உவெஸ்லி தேசிய பாடசாலைக்கு அருகாமையிலுள்ள கிருஸ்டா இல்ல மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) அம்பாறை பிராந்திய கல்முனை வலயத்தின் சிரேஸ்ட தோழர்களின் வடிவமைப்பில் மாவட்ட தோழர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக இடம்பெற்றது.
இதன் போது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் டெலோ முக்கியஸ்தரும் கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான ஹென்றி மகேந்திரன் உட்பட பல முக்கியஸதர்கள் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
கடந்ம 1991 ஜூன் 19ஆம் திகதி சென்னையில் வைத்து ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் கே.பத்மநாபா உட்பட முன்னணி பேராளிகள் படுகொலை செய்யப்பட்ட மற்றும் இயக்கத்தின் படுகொலையான போராளிகளின் நினைவாவாக மேற்படி நிகழ்வு இடம்பெற்றதுடன் பத்மநாபாவின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தபட்டதுடன் ஏனையோரின் நினைவு உரைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் புலம்பெயர் வாழ் கட்சி உறுப்பினர்களும் உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை பெற முடியாமல் தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகளை பெற முடியாது .தற்போதைய ஜனாதிபதியிடம் தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் ஒன்றினைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.அது தவிர கல்முனை பிரச்சினை தொடர்பாக 29 வருடங்களாக இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை போராடுகிறீர்கள்.
இதனை தரமுயர்த்துவதா இல்லையா என்பதை முதலில் வினவுங்கள்.ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடிவுக்காக உயிர்த் தியாகம் செய்த அத்தனை தமிழ் உறவுகளும் தியாகிகளேயாகும் .யுத்தத்தினால் உயிரிழந்த அனைவருமே தியாகிகளாகும். இவர்கள் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடிவுக்காகவே உயிர் நீத்தார்கள் இதில் பல தமிழ்க்கட்சிகளில் இருந்தும் உயிரிழந்துள்ளார்கள்.இதில் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் ஈ.பி.ஆர்.எல்.எப்.எனப்படும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிலிருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உயிரிழந்துள்ளனர்.மனைவி கணவனையும், தாய் தந்தை தனது பிள்ளையையும். சகோதரி சகோதரனையும் இழந்துள்ளார்கள் குடும்பத்திலிருந்து ஆறு உறவினர்கள் மற்றும் ஐந்து உறவினர்கள் நான்கு உறவினர்கள் என பலரும் தமது உறவுகளை இழந்துள்ளனர்.இந்த உயிரிழப்பானது தமிழர்களின் விடிவுக்காக செய்த மிகப்பெரிய தியாகமாகும்.
இவர்கள் உட்பட வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் விடிவுக்காக உயிர் துறந்து அனைவருமே தியாகிகளாகும். ஆந்த தியாகிகளை நாம் நினைவு கூருவது நமது கடமையாகும்.நமது சமூகத்தின் விடுதலையை நோக்கி சர்வதேசம் சென்று கொண்டிருக்கின்றது. இந்த விடுதலையானது வலுப்பெறுமே தவிர நலிவடைந்து விடாது. இதற்கு தமிழ் தியாகிகள் செய்த தியாகம் தமிழ் உயிர்களை பலி கொடுத்த உறவுகள் செய்த தியாகமுமே இன்று சர்வதேச முன்னெடுப்புக்களுக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது என இதன் போது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தியாகிகள் குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”