யாழில். குடும்பத்தகராறில் மூன்று மாத கன்றுக்குட்டி கல்லால் அடித்துப் படுகொலை!!
கணவன் மனைவிக்கு இடையிலான குடும்பத் தகராறினால் மனைவியின் சகோதரனின் மூன்று மாத மாட்டுக் கன்றுக்குட்டி ஒன்று கணவனின் தரப்பினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியை சேர்ந்த கணவன் மனைவிக்கு இடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் போது மனைவியின் சகோதரன் அதில் தலையிட்டு , சகோதரியின் கணவனுடன் முரண்பட்டுள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்தவர் , தன்னுடன் முரண்பட்ட மனைவியின் சகோதரனின் வீட்டுக்குள் , அத்துமீறி நுழைந்து அங்கு நின்ற மூன்று மாதங்களேயான மாட்டுக்கன்றினை கல்லினால் அடித்து படுகொலை செய்த பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”