திருட்டு சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது ; மேலதிக நடவடிக்கைக்காக சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைப்பு!!!
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் போதைப்பொருளுடன் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 80 கிராம் ஹெரோயின் , திருடப்பட்ட 7 துவிச்சக்கர வண்டிகள் , 4 மின் மோட்டார்கள் , 02 எரிவாயு சிலிண்டர்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளான குப்பிளான் , புன்னாலைக்கட்டுவன் பகுதிகளில் அண்மைய நாட்களில் மின் மோட்டார்கள் , துவிச்சக்கர வண்டிகள் , சமையல் எரிவாயு சிலிண்டர்கள் என்பன திருடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு குப்பிளான் கம்பம் புலம் பகுதியில் திருட்டு சந்தேக நபர் மறைந்த இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த புலனாய்வு பிரிவினர் சந்தேக நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் , அவரிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களையும் புலனாய்வு பிரிவினர் மேலதிக நடவடிக்கைக்காக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கையளித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”