கோடீஸ்வர பெண்ணின் கொலைச் சந்தேகநபர்கள் கைது!!
கண்டி லேக் சுற்று வட்டத்தின் சந்திக்கு அண்மித்த பெரிய வீடொன்றில் தனியாக வசித்து வந்த, 64 வயதுடைய பெண்ணை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் பெண்ணின் மகளின் கணவரின் தந்தை மற்றும் மற்றுமொரு நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட 52 மற்றும் 62 வயதுடைய இரு சந்தேகநபர்களும் கடவத்தை மற்றும் தெல்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் அப்பெண்ணை கொலை செய்யப் பயன்படுத்திய கத்தி, தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரின் வீட்டு பின்புறத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14ஆம் திகதி பகல் 2 மணியளவில் தனிமையில் இருந்த இப்பெண் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த பெண்மணியின் சொத்துகள் அவரது பிள்ளைகளுக்கு உரிய முறையில் பங்கிடப்படாமை காரணமாகவே இக்கொலைக்கு காரணம் என, தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி தலைமையக பொலிஸ் குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.