யாழ். இந்து மாணவர்கள் 41 பேர் 3ஏ சித்திகளை பெற்றறனர்!!
2021ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 41 மாணவர்கள் 3 பாடங்களில் ஏ சித்தியையும் 20 மாணவர்கள் 2ஏபி சித்தியையும் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் ஆர்.செந்தில்மாறன் வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெளதிக விஞ்ஞான பிரிவில் 26 மாணவர்களும் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 13 மாணவர்களும் வர்த்தக பிரிவில் ஒரு மாணவரும் மற்றொரு பிரிவில் ஒரு மாணவரும் என 41 மாணவர்கள் 3ஏ சித்தியைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.