கொழும்பில் பூனை மலத்துடன் வழங்கப்படும் உணவு!!
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவகங்களை நடத்திய 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி சுமார் 30 உணவகங்களில் பேரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.
இதன்போது, இராஜகிரியவில் உள்ள பிரபல உணவகத்தின் சமையல் அறையில் பூனை மலத்தை கண்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் அந்த உணவகம் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் இந்தச் சுற்றிவளைப்பில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு சந்தேகநபர்களும் கொழும்பு, அளுத்கடை மற்றும் கங்கொடவில நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பரிசோதனையின் போது, சில கடைகளில் சமைத்த உணவுகளுடன் இறைச்சி மற்றும் மீன் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதை சுகாதார அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.