கஞ்சனவின் கோரிக்கையை ஏற்றார் சம்பிக்க !!
எரிபொருள் கொள்வனவுகளை கண்காணிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக, செயல்படுவதற்கு பாட்டலி சம்பிக்க ரணவக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (29) உரையாற்றிய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, எரிபொருள் கொள்வனவுகளில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் புதிய பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.
இந்த குழுவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தலைமை தாங்க வேண்டும் என தெரிவித்த அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க அந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போதே பாட்டலி சம்பிக்க ரணவக்க தனது சம்மதத்தை வெளியிட்டிருந்தார்.