யாழ்.மாவட்ட பண்பாட்டு பேரவையினால் ஆக்கங்கள் கோரப்படுகின்றன!!
யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பேரவையினால் 2022 ஒக்டோபர் மாதம் முதலாம் வாரம் யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டு விழாவினை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ் விழாவில் வெளியீடு செய்யப்படும் மலருக்கு, யாழ்ப்பாணத்து வாழ்வியலும் பண்பாடும் என்ற தொனிப்பொருளில் விடயங்களை உள்ளடக்கியதாக ஆக்கங்களை 05 பக்கங்களுக்கு மேற்படாது கணணியில் பிரதியெடுத்து, நேரடியாகவோ அல்லது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஊடாகவோ 2022.09.10ஆம் திகதிக்கு முன்னராக தலைவர், மாவட்டப் பண்பாட்டுப் பேரவை, மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்’ எனும் முகவரிக்கு வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.