கிளிநொச்சியில் நகை அறுத்தவர்கள் யாழில் கைது!!
கிளிநொச்சி மாவட்டத்தில் தங்க சங்கிலியை அறுத்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியால் சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அறுத்து சென்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் யாழ். நகர் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் நகை ஒன்றினை விற்பனை செய்ய முற்பட்ட இருவர் தொடர்பில் நகைக் கடை உரிமையாளர்கள் சந்தேகமடைந்து, அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
அதனை அடுத்து இருவரையும் கைது செய்த பொலிஸார், அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது, இருவரும் கிளிநொச்சியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் எனவும், அவ்வாறு வழிப்பறி கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றரை பவுண் சங்கிலியையே விற்க முற்பட்டனர் எனவும், அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகையை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.