;
Athirady Tamil News

மல்லாக்க புரண்டது பஸ்: 18 பேர் காயம்: அறுவர் கவலைக்கிடம்!!

0

உடபுஸ்ஸலாவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானாதில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வலப்பனை பிரதேச வைத்தியசாலை மற்றும் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வலப்பனை- மஹவ பகுதியில் இந்த விபத்துஇன்று (30) காலை 1030 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து உடபுஸ்ஸலாவையில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, மீண்டும் மட்டக்களப்பு நோக்கி திரும்பியவர்களே இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர். அதில் காயமடைந்தவர்களில் அறுவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.