கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான 53 ஆவது சபை அமர்வு!! (படங்கள்)
கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான 53 ஆவது சபை அமர்வு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
திங்கட்கிழமை (29) மாலை இடம்பெற்ற இச்சபை அமர்வின் போது முதலில் சமய ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து கடந்த 2022.07.27 அன்றைய திகதி கூட்டறிக்கையை உறுதிப்படுத்தல், முதல்வரின் உரை,முதல்வரின் ஏனைய அpறிவத்தல்கள் என்பன நடைபெற்றன.
அத்துடன் உறுப்பினர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டதுடன் பின்னர் முதல்வரின் ஏனைய அறிவுறுத்தலுடன் கூட்டம் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”