5 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்வு..!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 25-ந் தேதி 10,725 ஆக இருந்தது. அதன்பிறகு 5 நாட்கள் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,231 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 44 ஆயிரத்து 25 ஆயிரத்து 816 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 10,828 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 35 ஆயிரத்து 852 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்றை விட 1,065 குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 64,667 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் மேலும் 45 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,27,874 ஆக உயர்ந்துள்ளது,