;
Athirady Tamil News

ரூ. 4 ஆயிரம் பட்ஜெட்டில் நோக்கியா ப்ளிப் போன் இந்தியாவில் அறிமுகம்..!!

0

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2660 ப்ளிப் போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக கடந்த மாத வாக்கில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய பீச்சர் போன் மைக் மற்றும் இயர்பீசை உங்கள் அருகில் கொண்டு வந்து, பயன்படுத்துவதை எளிமையாக்குகிறது.

இதே மாத துவக்கத்தில் நோக்கியா 8210 4ஜி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைலில் உள்ள எமர்ஜன்சி பட்டன் மூலம் விரும்புபவரை மிக எளிதில் தொடர்பு கொள்ள முடியும். ஏதேனும் அவசர சூழலில் அதிகபட்சம் ஐந்து காண்டாக்ட்களுக்கு இது பற்றிய தகவல் அனுப்பப்பட்டு விடும். இந்த போனில் ஹியரிங் ஏய்ட் கம்பேடிபிலிட்டி உள்ளது.

நோக்கியா 2660 ப்ளிப் அம்சங்கள்:
*2.8 இன்ச் 320×240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
*1.77 இன்ச் 160×128 பிக்சல் QVGA இரண்டாவது டிஸ்ப்ளே
*அதிகபட்சம் 1 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் டி107 சிங்கில் கோர் பிராசஸர்
*48MB ரேம்
*128MB மெமரி
*மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
*டூயல் சிம்
*ஸ்லாட் எஸ்30 பிளஸ் ஒஎஸ்
*விஜிஏ பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
*3.5 எம்எம் ஆடியோ ஜாக், வயர்லெஸ் எப்எம் ரேடியோ, MP3 பிளேயர்
*4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 4.2, மைக்ரோ யுஎஸ்பி 2.0
*1450 எம்ஏஹெச் பேட்டரி

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
நோக்கியா 2660 ப்ளிப் போன் பிளாக், ரெட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மொபைல் போனின் விற்பனை நோக்கியா இந்தியா ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோரில் நடைபெறுகிறது.

https://www.maalaimalar.com/technology/mobilephone/redmi-11-prime-5g-might-launch-in-india-next-week-505962?infinitescroll=1

You might also like

Leave A Reply

Your email address will not be published.