கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி காதலனுடன் திருமலையில் கைது!!
முல்லைத்தீவு குமுழமுனை பிரதேசத்தில் யுவதி ஒருவர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரில் வந்த இளைஞர் கும்பலொன்று யுவதியினை கடத்தி சென்றுள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் முதற்கட்டமாக கடத்தலுக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த மூன்று இளைஞர்களை கைதுசெய்துள்ளனர். இதனைதொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடத்தப்பட்ட யுவதி தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யுவதி காதலித்த இளைஞனுடன் ஒன்றாக இருக்கின்ற ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இளைஞனும் யுவதியும் திருகோணமலையில் விடுதியொன்றில் தங்கியிருந்த போது கடந்த 27.08.2022 அன்று அவர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.
இதேவேளை இளைஞனின் தாய்,சகோதரியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டு மற்றும் கடத்தல் சம்பவத்திற்கு உதவியவர்கள் என மொத்தமாக 6 பேர் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களை எதிர்வரும் 01.09.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
யுவதி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இளைஞனின் தாயாரின் வற்புறுத்தலினாலேயே இளைஞனுடன் திருகோணமலை சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. திருகோணமலையில் இளைஞனின் அக்கா விடுதியொன்றில் இருவரும் தங்குவதற்கான ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ளார். இதன்போதே இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக திருகோணமலையில் இருந்து “கோணேஸ்வரன்”