வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற பெண்ணை தாக்கி சங்கிலி அறுப்பு!!
வீதியால் நடந்து சென்ற பெண்ணை தாக்கி , தள்ளி விழுத்தி விட்டு சங்கிலியை வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரிக்கு அருகில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.,
உறவினர் ஒருவரின் அந்தியேட்டி கிரிகைக்கு சென்று, பேருந்தில் வந்திறங்கி தனது வீடு நோக்கி வீதியால் குறித்த பெண் நடந்து சென்று கொண்டிருந்த வேளை , மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் பெண்ணின் சங்கிலியை அறுக்க முயன்றுள்ளனர்.
அதன் போது குறித்த பெண் கொள்ளையர்களின் ஒருவரின் கையை பிடித்து இழுக்க முற்பட்ட வேளை , அப்பெண்ணை உதைத்து தள்ளி கீழே விழுத்தி விட்டு , பெண் அணிந்திருந்த 5 பவுண் சங்கிலியை அறுத்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்படு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.