சிக்கிமில் பயங்கர நிலச்சரிவு- 74 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு..!!
சிக்கிமில் உள்ள யுமதங் பள்ளத்தாக்கில் இன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 74 சுற்றுலா பயணிகளை இந்திய இராணுவ வீரர்கள் மீட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவு குறித்து வெளியிட்ட அறிக்கையில், “யும்தாங் பள்ளத்தாக்கில் இருந்து 19 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுற்றுலா பயணிகள் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, இந்திய இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சுற்றுலா பயனிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மரப்பலகை நடைபாதை, கயிறு, மனித சங்கிலி உருவாக்கி சுற்றுலா பயணிகளை மீட்டனர். மீட்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று, உணவு அளிக்கப்பட்டது. மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்று வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.